வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் விவசாயத்துறை!

பி.எஸ்சி விவசாயம் படித்தவர்கள், படிப்பு முடிந்த பின்பு, பணியில் சேரும் நிலையில் விவசாயம் தொடர்பான தேசியக் கொள்கைகளையும்,
வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் விவசாயத்துறை!

பிளஸ் 2 படித்த பின்பு விவசாயம் தொடர்பான படிப்புகளைப் படிப்பதில் மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். விவசாயம் தொடர்பாக என்னென்ன படிப்புகள் உள்ளன?

பி.எஸ்சி.விவசாயம்: பி.எஸ்சி விவசாயம் படித்தவர்கள், படிப்பு முடிந்த பின்பு, பணியில் சேரும் நிலையில் விவசாயம் தொடர்பான தேசியக் கொள்கைகளையும், அவர்களுக்கான திட்டங்களையும் அரசுக்காகத் தயாரிக்க முடியும். உரங்கள், தரமான விதைகள், நிதி உதவி பெறும் முறை குறித்தெல்லாம் இவர்களால் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிட முடியும். விவசாய உற்பத்தி, உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்துவது போன்றவை இப்படிப்பில் உள்ளடங்கியதாகும்.

விவசாயப் படிப்பில் சிறப்பு நிலைகள் (Specialization): பட்டுப்புழு வளர்ப்பு, விதை அறிவியல், விலங்கினங்களுக்கான உணவு முறைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிற துறைகள் எல்லாம் இப்படிப்பில் உள்ள சிறப்பு நிலைகளாகும். இப்படிப்பு, அறிவியல் முறைப்படி பயிரிடப்பட்டுள்ள பயிர்களைப் பார்த்துப் படித்தறிவது, கள ஆய்வு, குழு விவாதம், விரிவுரை நிகழ்த்துதல், காட்சி ஒளிமூலம் காணுதல் (Audio Visual aids), விவசாயக் கோட்பாடுகள் குறித்துப் படிப்பது எல்லாம் இப்படிப்பிற்கு உட்பட்டவைதான்.

கல்வித் தகுதி: பி.எஸ்சி விவசாயம் தொடர்பான படிப்பில் சேருவதற்கு +2 படிப்பில் அறிவியல் பிரிவில் படித்திருக்க வேண்டும். முன்பு இப்படிப்பில் சேர நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இப்போது நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதில்லை. + 2 படிப்பில் பெற்ற மதிப்பெண்களே சேர்க்கைக்குக் கணக்கில் கொள்ளப்படும். 50% மதிப்பெண்கள் + 2 படிப்பில் பெற்றிருந்தால் இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

விவசாயம் படிப்பில் உள்ள பட்ட படிப்புகள் மற்றும் பிற படிப்புகள்: BSC Agricultural Biotechnology, Agricultural Economics and Farm Management, Agriculture marketing & Business Management, Agronomy Biochemistry & Agricultural chemistry, crop psychology, Entomology, Bsc (Hons) Agriculture, Bsc Rural Agricultural work Experience, soil science, Tea husbandry & Technology, Agricultural and food Engineering.

Post graduate course: M.F.sc Applied Aquaculture, Freshwater Aquaculture, Inland Aquaculture, Mariculture, Msc Agricultural science   போன்று நிறைய படிப்புகள் உள்ளன. டாக்டர் பட்டத்திற்காக (Ph.d ) ஆய்வு செய்வதற்கும் அதிகத் துறைகள் உள்ளன.

(Diploma & certificate course Agriculture and allied practices)
Diploma in Agriculture; Food processing, post graduate Diploma in Fishery Science, post  graduate Diploma in pulb& paper Technology, PG Diploma in Regulates in Agricultural Biotechnology, certificate course in Agriculture and Allied practices, certificate course in Bio-Fertilizer production,  Food & Beverage service, Food production, mushroom spawn production and cultivation,  seed Technology, Agriculture science,  Food safety.. போன்ற படிப்புகள் பட்டயம், சான்றிதழ்ப் படிப்புகளில் உள்ளன.

இன்றைய விவசாயம் சார்ந்த படிப்புகள்:
இந்தியாவில் உள்ள விவசாயக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் எல்லாம் விவசாயம் சார்ந்த பல்வேறு படிப்புகளை இளநிலை, (UG) முதுநிலை (PG), ஆய்வு (Research for Ph.D) நிலையில் வழங்குகின்றன. இளநிலை அளவில் விவசாயம் குறித்துப் படிப்பதையே மாணவர்கள் அதிகம் விரும்புகின்றனர். இளநிலை அளவில் படித்தாலே பல வேலை வாய்ப்புகள் இத்துறை சார்ந்து உள்ளன. இளநிலைப் படிப்பு ஆழமான கல்வியை விவசாயத்துறை குறித்து வழங்குகிறது.

பட்டயப் படிப்பிற்குப் பின்பு பி.எஸ்சி விவசாயம் பி.டெக், (விவசாயம்) போன்ற படிப்புகள் இளநிலை அளவில் உள்ளன. இத்துறையில் மாணவர்களுக்கு முதுநிலைப் படிப்பிற்கும் (Msc)செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனைத் தொடர்ந்து இத்துறையில் பல வாய்ப்புகள் உள்ளன. கீழ்க்காணும் பாடங்களில் முதுநிலை (Msc), டாக்டர் பட்டம் (Ph.D) மாணவர்கள் படித்துப் பெறலாம்.

Agri Bio-Technology, Agri chemistry, Agri Economics, Agri Engineering, Agri Entomology, Agri meteorology, Agri statistics, Agri zoology, Agronomy, Ecology, Forming system management, Forestry, Horticulture, Mycology, Micro Biology, Nematology, plant pathology, plant psychology, seed Technology, plant protection, sericulture, social Forestry, Soil conservation, Soil Science, Sugarcane Technology.

விவசாயம், ஆடு, மாடு, கோழிவளர்ப்பு, பண்ணை நிர்வாகம், பயிர்வளர்ப்பு போன்ற சான்றிதழ் படிப்புகள் மட்டும் ஆன் லைன் மூலம் கற்றுத் தரப்படுகின்றன. இதற்கு வகுப்புகள் நடத்தப்படுவதில்லை.

ஆன்லைன் மூலம் நடத்தப்படும் படிப்புகள் வருமாறு:
Agronomy Bag 306, Commercial organic Vegetable Growth VH T 241, cut flower Bulbs BHT 317, Irrigation (Crops) BHT 204 úTôuûYÙm TiûQ ¨oYôLm ϱjÕ, Agricultural marketing Bag 304, Agronomy Bag 306, Farm management Bag 104, organic forming Bag 305, Soil management Agriculture bag 1.3, Advanced certificate in farm management VSC 910 போன்ற படிப்புகள் ஆன்லைன் மூலம் கற்றுத் தரப்படுகின்றன.

மத்திய விவசாயப் பல்கலைக்கழகம், விவசாயப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் பி.எஸ்சி விவசாயப் படிப்புகள் System education எனும் இப்படிப்பை அனைத்துப் பல்கலைக்கழகங்களும் வழங்குகின்றன. இப்படிப்பில் சேர 10, + 2 படிப்பில் அறிவியல் பிரிவில் பயின்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது இயற்பியல், உயிரியல், வேதியியல், கணிதம்/இயற்பியல், வேதியியல், கணிதம் கற்றிருக்க வேண்டும். 50% குறையாமல் மதிப்பெணகள் பெற்றிருக்க வேண்டும்.

System education படிப்பு 4 ஆண்டுகளில் 8 பருவங்களை உள்ளடக்கியதாகும். ஒவ்வொரு பருவமும் 110 வேலை நாட்களைக் கொண்டிருக்கும். இவற்றுள் ஒரு பருவத்தில் மாணவர்கள் கள ஆய்வில் (Filed work) ஈடுபட வேண்டும். இறுதியில் நேர்முகத் தேர்வும் நடத்தப்படும். அக மதிப்பீடு 50%, புற மதிப்பீடு 50% படி தேர்வுகள் நடத்தப்படும். 80% வருகைப் பதிவு இருந்தால் தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். முதுநிலை (PG), ஆய்வு நிலை (Ph.D) அளவிலும் பல படிப்புகள் உள்ளன. அவற்றையும் மாணவர்கள் படித்துத் தங்களின் கல்வித் திறனை, பட்டங்களை அதிகரித்து உயர்நிலைப் பணிகளுக்கு எளிதாகச் செல்லலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com