ஆமைவேகத்தில் பாதாளச் சாக்கடை திட்டம்

ஆவடி தொகுதியில் திருமுல்லைவாயல் தொடங்கி திருநின்றவூர் வரை, ஆவடி, பருத்திப்பட்டு, திருவேற்காடு, கோலடி, நூம்பல்,

திருவேற்காடு நகராட்சி பெயரில் போலி ரசீது கொடுத்து வசூல் வேட்டை
 ஆவடி தொகுதியில் திருமுல்லைவாயல் தொடங்கி திருநின்றவூர் வரை, ஆவடி, பருத்திப்பட்டு, திருவேற்காடு, கோலடி, நூம்பல், மாதரவேடு, புளியம்பேடு ஆகிய பகுதிகள் அடங்கியுள்ளன.
 இதில் ஆவடி பெருநகராட்சியாகவும், திருவேற்காடு நகராட்சியாகவும், திருநின்றவூர் பேரூராட்சியாகவும், நூம்பல், புளியம்பேடு ஆகிய 2 கிராமங்கள் வானகரம் ஊராட்சியின் கீழும் உள்ளன.
 இத்தொகுதியின் பிரச்னைகளை பகுதிவாரியாகப் பார்ப்போமா?
 ஆவடி: ஆவடியில் குடிநீர் வாரியத்தின் மூலம் குடிநீர் திட்டமும், பாதாளச் சாக்கடை திட்டமும் கடந்த 2011-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதுவரை 60 சதவீதம் பணிகள் கூடமுடியவில்லை. இதனால் ஒரு குடம் குடிநீரை ரூ. 6 கொடுத்து வாங்க வேண்டிய நிலை. பாதாளச் சாக்கடை திட்டம் ஆமைவேகத்தில் நடப்பதால் ஒவ்வொரு வீடும் மாதந்தோறும் ரூ. 2,000 செலவழித்து லாரிகள்மூலம் கழிவுநீரை அகற்றுகின்றனர்.
 திருவேற்காடு: இங்கு புகழ்பெற்ற கருமாரி அம்மன் கோயில் உள்ளது. இந்தச் சாலை வழியே செல்லும் வாகனங்களுக்கு நகராட்சி பெயரில் போலி நிழைவுக்கட்டண ரசீது கொடுத்து ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இதைத் தடுக்கமுடியவில்லை என்கின்றனர் அதிகாரிகள். இந்த ஆளும் கட்சிப் பிரமுகரின் செயல், தேர்தலில் அதிமுகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
 திருவேற்காட்டில் சேரும் குப்பைகளைக் கொட்டுவதற்கு இடமில்லாததால், நகராட்சிப் பகுதி முழுவதும் குப்பை அகற்றுவதில்லை. சாலை வசதியோ, குடிநீர் வசதியோ இங்கு சரிவர இல்லை. வெளியூர், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அவில் கோயிலுக்கு வந்துபோகும் இத் திருத்தலத்தில் சுகாதாரம் மிகவும் மோசமாக உள்ளது.
 திருநின்றவூர்: இங்கு பேரூராட்சியால் கட்டப்பட்ட மின்சாரச் சுடுகாடு முதல்வர் ஜெயலலிதாவால் 4 மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. ஆயினும், பணிகள் முழுமை பெறாததால் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
 குடிநீர் வசதியோ, பாதாளச் சாக்கடையோ, முழுமையான சாலை வசதியோ இங்கு கிடையாது.
 இங்குள்ள மக்கள், குடிநீரை காசு கொடுத்து வாங்குகின்றனர். சென்னைக்கு மிக அருகில் உள்ள இந்தப் பகுதி பின்னடைந்த மாநிலமான பிகாரில் உள்ள கிராமத்தை நினைவுபடுத்தும் அளவுக்கு உள்ளது.
 இன்னும் பல பிரச்னைகள்: ஆவடி தொகுதி முழுவதும் சுற்றிப் பார்த்தபோது, பெரும்பாலான இடங்களில் பூங்காக்கள் இல்லை; குடிநீர் இல்லை; பாதாளச் சாக்கடை இல்லை.
 முதல்வர் ஜெயலலிதாவால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை ஆறுவழி பாதை விரிவாக்கம், அரசியல்வாதிகளால் நிறைவேறவில்லை. இதனால் பாடியிலிருந்து திருநின்றவூர் வரை போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
 ஆவடி தொகுதியின் சட்டப்பேரவையின் உறுப்பினராக அமைச்சர் அப்துல்ரஹீம் இருந்தும் எந்தப் பிரச்னையும் தீர்க்கப்படவில்லை என்கின்றனர் பொதுமக்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com