திமுக தலைவர் கருணாநிதியின் மனு உட்பட 16 மனுக்கள் ஏற்பு

திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட 16 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் மனு உட்பட 16 மனுக்கள் ஏற்பு

திருவாரூர்: திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட 16 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

2016 தமிழக பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஏப்.22-ம் தேதி தொடங்கியது. திருவாரூர் தொகுதியில் முதல் நாள் சுயேட்சை 2 பேர் மனுத்தாக்கல் செய்தனர். ஏப்.23 வங்கி விடுமுறை, ஏப்.24 ஞாயிற்றுக்கிழமை என்பதால் மனுத் தாக்கல் நடைபெறவில்லை

ஏப்.25-ம்தேதி திருவாரூர் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடம் திமுக தலைவர் மு. கருணாநிதியும், ஏப்.28-ல் அதிமுக வேட்பாளர் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். தொடர்ந்து அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் மனுத்தாக்கல் செய்தனர். ஏப்-29-ம் தேதி மனுத்தாக்கல் இறுதி நாள் வரை திருவாரூர் தொகுதியில் போட்டியிட 23 வேட்பாளர்கள் 33 மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று மனுத்தாக்கல் செய்த வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

மனுவை பரிசீலித்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் இரா. முத்துமீனாட்சி கூறியது: திருவாரூர் தொகுதியில் போட்டியிட மொத்தம் 23 வேட்பாளர்கள் 33 மனுவை தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு பரிசீலனையில் 16 முதன்மை வேட்பாளர்கள் மனு ஏற்கப்பட்டு, 17 மாற்று வேட்பாளர்கள் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஏற்கப்பட்ட வேட்பாளர்கள் விவரம்: மு. கருணாநிதி (திமுக), ஆர். பன்னீர்செல்வம் (அதிமுக), பி.எஸ். மாசிலாமணி (சிபிஐ), சந்திரசேகர் (நாம் தமிழர் கட்சி), என். ரெங்கதாஸ் (பாஜக), ஆர். சிவக்குமார் (பாமக), எம். சுபாஷ்பாபு (அன்பு உடமைக் கட்சி), எஸ். கணேசன் (தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்), பத்மநாபன் (பகுஜன் சமாஜ் கட்சி), ச. சரவணன் (தமிழக தேவேந்திரகுல எழுச்சி இயக்கம்) மற்றும் தேவக்குமார் (சுயே), எஸ். ராஜேந்திரன் (சுயே), ஆர். பன்னீர்செல்வம் (சுயே), டி. செல்வராஜ் (சுயே), மீனாட்சிசுந்தரம் (சுயே), பாலாஜி (சுயே) ஆகியோரது மனுக்கள் ஏற்கப்பட்டது என்றார் முத்துமீனாட்சி. மே.2-ம் தேதி வேட்பு மனுக்கள் திரும்பப்பெற விரும்புவோர் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com