திமுக 3வது அணியாகப் போகிறது என்பது கருணாநிதிக்கே தெரியாது: வைகோ

வரும் தேர்தலில் திமுக கட்சிதான் 3வது அணியாகப் போகிறது என்பது அக்கட்சியின் தலைவர் கருணாநிதிக்கே தெரியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திமுக 3வது அணியாகப் போகிறது என்பது கருணாநிதிக்கே தெரியாது: வைகோ

சென்னை : வரும் தேர்தலில் திமுக கட்சிதான் 3வது அணியாகப் போகிறது என்பது அக்கட்சியின் தலைவர் கருணாநிதிக்கே தெரியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு வைகோ பேட்டி அளித்தார்.

அப்போது, தமிழகத்தில் 3வது கட்சி என்ற ஒன்று இருப்பதே தெரியவில்லையே என்று கருணாநிதி கூறியிருப்பது குறித்து வைகோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த வைகோ, வரும் தேர்தலில் திமுக கட்சிதான் 3வது அணியாகப் போகிறது என்பது அக்கட்சியின் தலைவர் கருணாநிதிக்கே தெரியாது. இந்த தேர்தலில் எங்கள் கூட்டணிதான் வெற்றி பெறும். இரண்டாவது இடத்தில் அதிமுக இருக்கும். மூன்றாவது இடம்தான் திமுகவுக்குக் கிடைக்கும் என்று கூறினார்.

மூன்றாவது கட்சி குறித்து எதிர்க்கட்சிகளும் பேசுவதில்லை, மக்களிடையே பெரிய அளவுக்கு வரவேற்பு இருப்பதாகத் தெரியவில்லையே என்ற கேள்விக்கு.. வைகோ கூறிய பதில் இதுதான்.

இது அவர்கள் சொல்வது இல்லை. தமிழக ஊடகங்களுக்கும், தொலைக்காட்சிகளும் எங்கள் கட்சிகளைப் பற்றிய செய்திகளை அதிகம் சொல்வதில்லை.  எங்கள் கட்சியைப் பற்றி செய்திகளை வெளியிடாமல் ஊடகங்கள் மறைக்கின்றன. ஆனால், வீட்டில் இருக்கும் பெண்கள் இதனை நன்கறிவர். என்ன நடந்தது. இனி என்ன நடக்கும் என்பதையும் அவர்கள் அறிவார்கள். மக்களிடையே நாங்கள் சென்றடைந்துவிட்டோம்.

முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி கோபல்சாமியே கூறியுள்ளார், தேர்தலில் ஒரு கட்சியை ஆதரித்து செய்தி போட ஒரு தொகை, எதிர்த்துப் போட ஒரு தொகை என்று.. இரு கட்சிகளையும் தவிர மற்றொரு கட்சி இருப்பதை மக்களிடையே கொண்டு செல்லாமல் ஊடகங்கள் மறைத்து வருகின்றன. அதுதான் காரணம் என பதில் அளித்தார்.

ஊழல் கட்சிகள் தமிழகத்தை நாசப்படுத்தி, மதுவைக் கொண்டு வந்து சீரழித்துவிட்டன. எங்களுக்கு மக்களிடையே இருக்கும் ஆதரவு வாக்கு எண்ணுகிற அன்றைய தினம் தெரியும் என்று பதிலளித்தார்.

திமுக, அதிமுக கட்சிகளின் பிரசாரம் போன்று உங்கள் கூட்டணிக் கட்சிகளின் பிரசாரம் அவ்வளவு உற்சாகமாக இல்லை என்று கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு?

எங்கள் கூட்டணியில் உள்ள 6 கட்சிகளைச் சேர்ந்த 7 தலைவர்கள் தமிழகத்தை சுற்றி வருகிறோம். மக்களை சந்திக்கிறோம். எங்கள் கூட்டத்துக்கு காசு கொடுக்காமல் கூட்டம் வருகிறது. எனவே அதுதான் உண்மையான பிரசாரப் பலம்.

நீங்கள் கூறும் கட்சிகள் காசு கொடுத்து கூட்டி வருகிறார்கள். அவர்கள் உற்சாகமாக இருப்பது போல இருக்கலாம். ஆனால், எங்களுக்கு வரும் மக்கள் அவர்களாக வருகிறார்கள் என்று பதிலளித்தார்.

ஊடகங்களைப் பற்றி வைகே கூறுகையில், திமுக, அதிமுக கட்சிகளுக்கு தனித்தனியாக தொலைக்காட்சிகள் உள்ளன. மற்ற ஊடகங்கள், எங்கள் பிரசாரத்தைக் காட்டுவதில்லை. ஆனால், நாங்கள் யாரையாவது சத்தம் போட்டால் நானோ விஜயகாந்த்தோ குடித்துவிட்டு வருபவர்களை வெளியே போகச் சொன்னாலோ அதை மட்டும் போட்டு போட்டு காட்டுகிறார்கள். மக்களுக்கு எதை சேர்க்க வேண்டுமோ அதை கொண்டு சேர்ப்பதில்லை என்று வைகோ காட்டமாகக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com