'புகழ் பெற்ற ஏழைகள்': இரண்டே வரிகளில் வாழ்க்கைத் தத்துவம்! -பி.வி.கிரி

ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் முன்னேறி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்கள். இந்த ஏழைகளின் வெற்றியை விவரிக்கும் நூல்தான் ’புகழ் பெற்ற ஏழைகள்’ என்ற ஆங்கில நூல்.
பி.வி. கிரி
பி.வி. கிரி

அந்தச் சிறுவனுக்குக் காலுக்குச் செருப்பில்லை; உடுத்திக் கொள்ள நல்ல ஆடையும் இல்லை. மான் தோலால் ஆன அரை நிஜாரை அணிந்திருந்தான். வறுமையால் உழன்ற அந்த சிறுவனுக்கு ’வாஷிங்டனின் வாழ்க்கை’ என்ற பழைய நூல் படிக்கக் கிடைத்தது. ஒருநாள் பெய்த மழையில் அவனது ஓட்டை மர வீடு ஒழுகி அந்தப் புத்தகம் நானைந்துவிட்டது. அதன் உரிமையாளருக்கு நாள் ஒன்றுக்கு இருபத்தைந்து சதவீதம் மூன்று நாள்கள் கூலி வேலை செய்து அந்தப் புத்தகத்தின் மதிப்பைச் செலுத்தி அதைத் தனதாக்கிக் கொண்டான். உடுத்த கால்சட்டை இல்லாத நிலையில் அதை வாங்க நானூறு மரக்கட்டைகளை உடைத்து அந்தக் கூலியின் கால் சட்டை வாங்கினான். அவன் யார்? அவன் தான் பின்னாளில் அமெரிக்க ஜனாதிபதியான ஆப்ரஹாம் லிங்கன்.

சிறுவயதில் தெருவில் பத்திரிகைகளையும் ரயிலில் புத்தகங்களையும் விற்ற தாமஸ் ஆல்வா எடிசன் பின்னாளில் புகழ் பெற்ற விஞ்ஞானியானார்.

இப்படி ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் முன்னேறி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்கள். இந்த ஏழைகளின் வெற்றியை விவரிக்கும் நூல்தான் ’புகழ் பெற்ற ஏழைகள்’ என்ற ஆங்கில நூல். இதை எழுதியவர் சாரா கே.போல்டன். தமிழில் இந்த நூலை குண்டூசி கோபால் மொழிபெயர்த்துள்ளார். மும்பையிலிருந்து பெர்ல் பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் 1960-ல் 236 பக்கங்களில் வெளியிட்ட இந்த நூலின் அப்போதைய விலை 75 காசுகளே.

வறுமையில் உழன்று கால வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டு முன்னேறிய பதினேழு மாமனிதர்களின் வாழ்க்கை வரலாறுகள் இந்த நூலில் சித்தரிக்கப்பட்டுள்ளன. பெஞ்சமின் பிராங்கிளின், மைக்கேல் பாரடே, கரிபால்டி, சார்லஸ் சிக்கென்ஸ். ஹென்றி ரூதர் போர்டு முதலிய

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com