தமிழக பட்ஜெட்
2020 - 21 பட்ஜெட்: தமிழகத்தின் கடன் தொகை எவ்வளவு தெரியுமா?
2020 - 21ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
சென்னை: 2020 - 21ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது,
- பொருளாதார நெருக்கடிகளை தமிழக அரசு திறமையாக சமாளித்து வருகிறது.
- மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் தமிழகத்துக்கான பங்கு 4.023%ல் இருந்து சிறிது உயர்ந்து 4.189% ஆக உள்ளது.
- தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும்.
- தமிழகத்தின் கடன் 4.56 லட்சம் கோடியாக உள்ளது என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.