பட்ஜெட்: அரசுப் பேருந்துகளில் அனைத்திலும் வருகிறது புதிய வசதி

அரசுப் பேருந்துகள் அனைத்திலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்: அரசுப் பேருந்துகளில் அனைத்திலும் வருகிறது புதிய வசதி


சென்னை: அரசுப் பேருந்துகள் அனைத்திலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், நிர்பயா நிதியின் கீழ் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரூ.75.02 கோடியில் அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்.

பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா திட்டத்துக்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.71கோடி ஒதுக்கீடு.

அத்திக்கடவு - அவினாசி திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.

அரசுப் பேருந்துகளில் மின்னணு பணப்பரிமாற்ற முறையில் பயணச் சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பணமில்லா மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் அரசுப் பேருந்துகளில் மின்னணு பணப்பரிமாற்ற முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com