தமிழக பேரவையில் 3.15 மணி நேரம் பட்ஜெட் உரையாற்றிய ஓ. பன்னீர்செல்வம்

தமிழக சட்டப்பேரவையில் இன்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சரியாக 3.15 மணி நேரம் பட்ஜெட் உரையாற்றினார்.
ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்


சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சரியாக 3.15 மணி நேரம் பட்ஜெட் உரையாற்றினார்.

தமிழகத்தின் 2020 - 21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையைத் தொடங்கினார்.

கீழடியில் அருங்காட்சியகம், எல்ஐசி மூலம் ஏழை எளிய மக்களுக்கு காப்பீடு வசதி, ஒரே தேசம் ஒரே ரேஷன் திட்டம் விரிவாக்கப்படும், அரசு ஊழியர்களுக்கு புதிய குடியிருப்பு, அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கேமரா, பல்வேறு மாவட்டங்களில் அதனதன் சிறப்புகளை ஊக்குவிக்கும் வகையில் தொழில் மற்றும் உணவுப் பூங்காக்கள் என பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்ட பட்ஜெட்டை இடைவெளி இல்லாமல் வாசித்து முடித்தார் பன்னீர்செல்வம்.

சரியாக மதியம் 1.17 மணிக்கு பன்னீர்செல்வத்தின் உரை நிறைவு பெற்றது. இதன் மூலம் இடைவெளி இல்லாமல் 3.15 மணி நேரம் பட்ஜெட் உரையை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com