சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.3,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
மெட்ரோ ரயில்
மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.3,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

2020 - 21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இது ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 10ஆவது பட்ஜெட் ஆகும்.

அதில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 52 கிமீ தூர மெட்ரோ ரயில் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com