காபி உற்பத்தி 3.16 லட்சம் டன்னாக குறையும்

சாதகமற்ற பருவநிலையால் நடப்பு 2016-17-ஆம் பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) காபி உற்பத்தி 3,16,700 டன்னாக குறையும் என்று காபி வாரியம் தெரிவித்துள்ளது.
காபி உற்பத்தி 3.16 லட்சம் டன்னாக குறையும்

சாதகமற்ற பருவநிலையால் நடப்பு 2016-17-ஆம் பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) காபி உற்பத்தி 3,16,700 டன்னாக குறையும் என்று காபி வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வாரியம் மேலும் கூறியுள்ளதாவது:
சென்ற 2015-16-ஆம் நிதி ஆண்டில் காபி உற்பத்தி 3,48,000 டன்னாக இருந்தது.
இந்த நிலையில், நடப்பு பருவத்தில் அதிக வெப்பநிலை காணப்படுவதை அடுத்து, காபி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நடப்பு பருவத்தில் 3,16,700 டன் காபி உற்பத்தியாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய மதிப்பீடான 3,20,000 டன்னைக் காட்டிலும் இது குறைவான அளவாகும்.
கடந்த பருவத்துடன் ஒப்பிடுகையில் நடப்பு பருவத்தில் காபி உற்பத்தி 7.05 சதவீதம் குறையும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக, அராபிகா வகை காபி உற்பத்தி 1,03,500 டன்னிலிருந்து 96,200 டன்னாகவும், ரோபஸ்டா வகை காபி உற்பத்தி 2,44,500 டன்னிலிருந்து 2,20,500 டன்னாகவும் குறையும்.
தமிழகத்தில் காபி உற்பத்தி 17,295 டன்னிலிருந்து 16,560 டன்னாகவும், கர்நாடகத்தில் 2,51,520 டன்னிலிருந்து 2,26,300 டன்னாகவும், கேரளத்தில் காபி உற்பத்தி 69,230 டன்னிலிருந்து 63,290 டன்னாகவும் குறையும் என்று காபி வாரியம் தெரிவித்துள்ளது.
இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து அதிக அளவில் காபி ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com