ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி லாபம் 16% சரிவு

தனியார் துறையைச் சேர்ந்த ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் மூன்றாம் காலாண்டு லாபம் 16.7 சதவீதம் சரிவடைந்தது.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி லாபம் 16% சரிவு

தனியார் துறையைச் சேர்ந்த ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் மூன்றாம் காலாண்டு லாபம் 16.7 சதவீதம் சரிவடைந்தது.
இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நடப்பு நிதி ஆண்டின் அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் வருவாய் ரூ.27,875.67 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.25,585.14 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 8.95 சதவீதம் அதிகமாகும்.
நிகர வட்டி வருவாய் ரூ.5,453 கோடியிலிருந்து குறைந்து ரூ.5,363 கோடியாக இருந்தது. வட்டி சாராத வருவாய் ரூ.4,217 கோடியிலிருந்து சரிந்து ரூ.3,939 கோடியாக காணப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி ரூ.16,483 கோடியாக காணப்பட்ட நிகர அளவிலான வாராக் கடன் டிசம்பர் இறுதி நிலவரப்படி ரூ.20,155 கோடியாக இருந்தது. வாராக் கடன் அதிகரிப்பு பிரச்னையால் நிகர லாபம் ரூ.3,122.35 கோடியிலிருந்து 16.7 சதவீதம் வீழ்ச்சியடைந்து ரூ.2,610.83 கோடியாக இருந்தது என்று ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com