"சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்3' டேப்லட் கணினி அறிமுகம்

சாம்சங் நிறுவனம், "கேலக்ஸி டேப் எஸ்3' என்ற டேப்லட் கணினியை செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது.
"சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்3' டேப்லட் கணினி அறிமுகம்

சாம்சங் நிறுவனம், "கேலக்ஸி டேப் எஸ்3' என்ற டேப்லட் கணினியை செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது.

பெங்களூரில் நடைபெற்ற டேப்லட் கணினி அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாம்சங் இந்தியாவின் இயக்குநர் (மொபைல் வர்த்தகம்) விஷால் கவுல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரீமியம் தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்ட புதிய "கேலக்ஸி டேப் எஸ்3' டேப்லட் கணினி வாடிக்கையாளர்களுக்கு ஆக்கப்பூர்வமான மற்றும் அவர்களின் பல்வேறு பணிகளுக்கு பயன்படக் கூடியதாக இருக்கும். மேலும், வீடு, அலுவலகம், அல்லது பயணத்தின்போது என எங்கும் உபயோகப்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரீமியம் டேப்லட் அறிமுகத்தின் மூலம் சந்தையில் தலைமையிடத்தை சாம்சங் நிறுவனம் மேலும் வலுப்படுத்திக் கொள்ளும்.
இந்த புதிய டேப்லட், 9.7 அங்குல சூப்பர் அமோல்டு தொடுதிரை, குவால்கோம் ஸ்நாப்டிராகன் 820 பிராசஸர், 4ஜிபி ரேம், 32ஜிபி உள்நினைவக திறன் (மைக்ரோஎஸ்டி கார்டு மூலம் 256ஜிபி வரை விரிவுபடுத்திக் கொள்ளும் வசதி), ஆன்ட்ராய்டு 7.0 நூகாட், குவாட் ஸ்பீக்கர்ஸ், 6,000 எம்ஏஹெச் பேட்டரி, 13எம்பி பின்பக்க கேமரா, 5எம்பி முன்பக்க கேமரா உள்ளிட்ட வசதிகளை உள்ளடக்கியுள்ளது.
6எம்எம் தடிமன் கொண்ட இந்த டேப்லட் கணினியின் எடை வெறும் 434 கிராம் மட்டுமே. எனவே, இதனை எங்கும் எளிதாக எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். இதன் விலை ரூ.47,990-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com