சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.13 குறைந்து, ரூ. 23,488}க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கியக் காரணமாக உள்ளன.
சென்னையில் திங்கள்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 13 குறைந்து , ரூ.2,936} க்கு விற்பனையானது. வெள்ளி 1 கிராமுக்கு 10 பைசா குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 41.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ. 41,600 }ஆகவும் இருந்தது.