அசோக் லேலண்ட் விற்பனை 79% அதிகரிப்பு

ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகன விற்பனை சென்ற டிசம்பரில் 79.41 சதவீதம் அதிகரித்தது.
அசோக் லேலண்ட் விற்பனை 79% அதிகரிப்பு

ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகன விற்பனை சென்ற டிசம்பரில் 79.41 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
அசோக் லேலண்ட் டிசம்பர் மாதத்தில் 19,253 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த 2016 டிசம்பரில் விற்பனையான 10,731 வாகனங்களுடன் ஒப்பிடும்போது இது 79.41 சதவீத வளர்ச்சியாகும்.
நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்கள் விற்பனை 8,782 என்ற எண்ணிக்கையிலிருந்து 81.62 சதவீதம் உயர்ந்து 15,950ஆனது. இலகு ரக வர்த்தக வாகனங்கள் விற்பனை 1,949லிருந்து 69.47 சதவீதம் அதிகரித்து 3,303ஆக இருந்தது என அசோக் லேலண்ட் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com