ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் 36.98 சதவீதம் சரிந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு செவ்வாய்க்கிழமை அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வருவாய் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் ரூ.749.52 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.716.05 கோடியாக காணப்பட்டது. செலவினம் ரூ.715.22 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.737.32 கோடியானது.
நிகர லாபம் ரூ.23.25 கோடியிலிருந்து 36.98 சதவீதம் சரிந்து ரூ.14.65 கோடியாக காணப்பட்டது என ஃபோர்ஸ் மோட்டார்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.