மக்கள் சேமிப்பை மோடி அரசு வீணடிக்கிறது: எல்ஐசி, ஐடிபிஐ இணைப்புக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எதிர்ப்பு

எல்ஐசி, ஐடிபிஐ உடன் இணைந்து வங்கிச் சேவையில் ஈடுபடுவது மக்கள் சேமிப்பை மோடி அரசு வீணடிக்க செய்த திட்டம் என்று காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மக்கள் சேமிப்பை மோடி அரசு வீணடிக்கிறது: எல்ஐசி, ஐடிபிஐ இணைப்புக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எதிர்ப்பு

எல்ஐசி, ஐடிபிஐ உடன் இணைந்து வங்கிச் சேவையில் ஈடுபடுவது மக்கள் சேமிப்பை மோடி அரசு வீணடிக்க செய்த திட்டம் என்று காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்தியாவின் காப்பீடு சேவை நிறுவனத்தில் பிரதானமாகவும், முதன்மையானதாகவும் செயல்பட்டு வரும் எல்ஐசி அமைப்பு வங்கிச் சேவையில் ஈடுபட முடிவு செய்துள்ளது. அதன்படி ஐடிபிஐ வங்கியின் 51 சதவீத பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளது. இதற்கு ஐஆர்டிஏஐ ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் இந்த செயல் மக்களின் சேமிப்பை மோடி அரசின் வீணடிக்கும் செயல் என்று காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சித்துள்ளன. 

பொதுத்துறை வங்கிகளிலேயே மிகப்பெரிய நஷ்டத்தில் ஐடிபிஐ வங்கி இயங்கிக்கொண்டிருக்கிறது. அதன் சமீபத்திய முழு ஆண்டு நிலையின் படி ரூ.5,663 கோடி இழப்பை சந்தித்துள்ளது. இதன்மூலம் ஐடிபிஐ வங்கி நிறுவனம் மொத்தம் 55 ஆயிரத்து 558.26 கோடி நஷ்டத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில், விதிகளின் அடிப்படையில் எல்ஐசி அமைப்பு ஐடிபிஐ வங்கியில் 15 சதவீதத்துக்கும் மேல் பங்குகளை வாங்க இயலாது. அதுமட்டுமல்லாமல் அதிகப்படியான பங்குகளை வைத்திருப்பதன் மூலம் அந்த வங்கியின் பிரதான மூலதனமாக எல்ஐசி விளங்குகிறது. எனவே, வருங்காலங்களில் ஐடிபிஐ வங்கி சேவைக்கான நிதிப்பற்றாக்குறையை எல்ஐசி ஈடுகட்ட நேரிடும். இதனால் எல்ஐசி-யிடம் உள்ள 38 கோடி காப்பீடு சந்தாதாரர்களின் மேல்தான் அதன் சுமை விழும். இதன்மூலம் மக்களின் சேமிப்பு வீணடிக்கப்படுகிறது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

காப்பீடு துறையில் பொதுமக்களின் பிரதான சேமிப்புக்களமாக எல்ஐசி திகழ்கிறது. இதில் மக்களின் சேமிப்பை கொண்டு நஷ்டத்தில் இயங்கும் ஒரு பொதுத்துறை வங்கியை மீட்டெடுக்கும் முயற்சி என்பது பொதுமக்களின் சேமிப்பை கொள்ளை அடிப்பதற்கு சமம். எல்ஐசி, வங்கி சேவையில் ஈடுபடவேண்டிய அவசியமில்லை. ஆனால் விதிகளை மாற்றி அதில் ஈடுபட வேண்டுமென்றே திணிக்கப்படுகிறது. இதன்மூலம் விதிமுறைகளை உடைத்து கடனாளிகள் தங்களின் கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லாத சூழ்நிலையை மோடி அரசு ஏற்படுத்தி வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com