ராயல் என்ஃபீல்டு விற்பனை 25%-ஆக அதிகரிப்பு

ராயல் என்ஃபீல்டு விற்பனை 25%-ஆக அதிகரிப்பு

ஐஷர் மோட்டார்ஸின் இரு சக்கர வாகன பிரிவான ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் பிப்ரவரி மாத விற்பனை 25 சதவீதம் அதிகரித்தது.

ஐஷர் மோட்டார்ஸின் இரு சக்கர வாகன பிரிவான ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் பிப்ரவரி மாத விற்பனை 25 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சென்ற பிப்ரவரி மாதத்தில் ராயல் என்ஃபீல்டு விற்பனை 73,077-ஆக இருந்தது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 58,439 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 25 சதவீதம் அதிகமாகும்.
நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் ஏற்றுமதி 1,702 என்ற எண்ணிக்கையிலிருந்து 1 சதவீதம் உயர்ந்து 1,723-ஆக இருந்தது என ராயல் என்ஃபீல்டு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com