டிவிஎஸ் மோட்டார் லாபம் 30% அதிகரிப்பு

சென்னையைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 30.63 சதவீதம் அதிகரித்தது.
டிவிஎஸ் மோட்டார் லாபம் 30% அதிகரிப்பு

சென்னையைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 30.63 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் செயல்பாடுகள் மூலமாக நிறுவனத்துக்கு ரூ.3,992.76 கோடி வருவாய் கிடைத்தது. கடந்த 2016-17 நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ3,076.02 கோடியாக இருந்தது. நிகர லாபம் ரூ.126.77 கோடியிலிருந்து 30.63 சதவீதம் அதிகரித்து ரூ.165.61 கோடியானது.
சென்ற 2017-18 முழு நிதி ஆண்டில் வருவாய் ரூ.13,190.06 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.15,472.88 கோடியாகவும், நிகர லாபம் ரூ.558.08 கோடியிலிருந்து 18.72 சதவீதம் அதிகரித்து 662.59 கோடியாகவும் இருந்தது. 
பங்குதாரர்களுக்கு ஏற்கெனவே இரண்டு முறை இடைக்கால ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டது. அதன் மூலம், ரூ. 1 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.3.30 (330 சதவீதம்) ஈவுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதனால், நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு மேற்கொண்டு ஈவுத்தொகை எதையும் பரிந்துரைக்கவில்லை என டிவிஎஸ் மோட்டார் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com