நாட்டின் சர்க்கரை உற்பத்தி 15 சதவீதம் சரிவு

நாட்டின் சர்க்கரை உற்பத்தி நடப்பு சந்தைப் பருவத்தில் நவம்பர் 15-ஆம் தேதி வரையிலான காலத்தில் 15 சதவீதம் சரிவடைந்துள்ளதாக இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (ஐஎஸ்எம்ஏ) தெரிவித்துள்ளது.
நாட்டின் சர்க்கரை உற்பத்தி 15 சதவீதம் சரிவு

நாட்டின் சர்க்கரை உற்பத்தி நடப்பு சந்தைப் பருவத்தில் நவம்பர் 15-ஆம் தேதி வரையிலான காலத்தில் 15 சதவீதம் சரிவடைந்துள்ளதாக இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (ஐஎஸ்எம்ஏ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கூட்டமைப்பு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2017-18 சந்தைப் பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) நாட்டின் சர்க்கரை உற்பத்தி சாதனை அளவாக 3.25 கோடி டன்னை எட்டியிருந்தது. 
இந்த நிலையில், கடந்த மாதம் தொடங்கிய 2018-19-க்கான நடப்பு சந்தைப் பருவத்தில் நவம்பர் 15  வரையிலுமாக சர்க்கரை உற்பத்தியானது 15 சதவீதம் சரிவடைந்து 11.6 லட்சம் டன்னாகியுள்ளது. கடந்தாண்டு இதே கால அளவில் உற்பத்தி 13.7 லட்சம் டன்னாக காணப்பட்டது.
இதையடுத்து, நடப்பு சந்தைப் பருவத்துக்கான ஒட்டுமொத்த சர்க்கரை உற்பத்தி 3.55 கோடி டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன் உற்பத்தி 3.15 கோடி டன்னாக குறைவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
நடப்பு பருவத்தில் நவம்பர் 15 நிலவரப்படி 238 ஆலைகளில் சர்க்கரை உற்பத்தியானது தொடங்கியுள்ளது. அதேசமயம், கடந்தாண்டு இதே காலத்தில் 349 ஆலைகளில் இதன் உற்பத்தி பணிகள் தொடங்கி விட்டது கவனிக்கத்தக்கது.
நடப்பாண்டில் அரவைப் பணிகள் தாமதமாகியுள்ளதையடுத்து உத்தர பிரதேசத்தில் சர்க்கரை உற்பத்தி 5.67 லட்சம் டன்னிலிருந்து 1.76 லட்சம் டன்னாகவும், கர்நாடகாவில் 3.71 லட்சம் டன்னிலிருந்து 1.85  லட்சம் டன்னாகவும்  சரிந்துள்ளது. 
அதேசமயம், மகாராஷ்டிராவில் அதன் உற்பத்தி 3.26 லட்சம் டன்னிலிருந்து 6.31 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது என ஐஎஸ்எம்ஏ அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
விவசாயிகளுக்கு கரும்புக்கான நிலுவையை வழங்கவும், உபரியாக உள்ள கையிருப்பைக் குறைக்கவும், நடப்பு சந்தைப் பருவத்தில் சர்க்கரைக்கான ஏற்றுமதி அளவை 50 லட்சம் டன் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என மத்திய அரசை சர்க்கரை ஆலைகள் கேட்டுக் கொண்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com