சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை

சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததால் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் சரிவிலிருந்து மீண்டது.
சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை


சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததால் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் சரிவிலிருந்து மீண்டது.
அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு மற்றும் வாரன் பப்பெட்டின் பெர்க்ஷையர் ஹாத்வே, கோட்டக் மஹிந்திரா வங்கியின் பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் ஆகியவற்றின் காரணமாக வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. 
இதைத் தவிர அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போருக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை, விலை சரிவின் காரணமாக எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபெக் நாடுகள் இன்னும் 
இறுதி முடிவு எடுக்காதது உள்ளிட்ட சர்வதேச நிகழ்வுகளும் இந்தியப் பங்குச் சந்தைகளுக்கு சாதகமாகவே இருந்தன.
பெர்க்ஷையர் ஹாத்வேவின் முதலீடு குறித்த தகவலால் கோட்டக் மஹிந்திரா வங்கி பங்கின் விலை 9 சதவீதம் வரை அதிகரித்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதைத் தவிர, அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, இன்ஃபோசிஸ், ஏஷியன் பெயின்ட்ஸ், மாருதி சுஸுகி, ஹெச்யுஎல், எல் அண்டு டி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை 3 சதவீதம் வரை உயர்ந்தன.
அதேசமயம், சன் பார்மா, கோல் இந்தியா, யெஸ் வங்கி, பவர்கிரிட் மற்றும் என்டிபிசி பங்குகளின் விலை 2 சதவீதம் வரை குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் இறுதி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 361 புள்ளிகள் உயர்ந்து 35,673 புள்ளிகளில் நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 92 புள்ளிகள் உயர்ந்து 10,693 புள்ளிகளில் நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com