வெளிநாட்டு கிளைகளை மூடுவதில் பேங்க் ஆஃப் பரோடா தீவிரம் 

பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வெளிநாட்டு கிளைகளை மூடுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வரும் ஜூன் மாதத்துக்கள் மூன்று கிளைகளை மூடவுள்ளதாக அந்த வங்கி

பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வெளிநாட்டு கிளைகளை மூடுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வரும் ஜூன் மாதத்துக்கள் மூன்று கிளைகளை மூடவுள்ளதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேங்க் ஆஃப் பரோடா திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
வெளிநாட்டில் உள்ள வங்கி கிளைகளை சீரமைக்க மத்திய அரசு தெரிவித்துள்ள வழிமுறைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ள கிளைகளின் செயல்திறன் மற்றும் லாபத்தன்மையை அதிகரிக்கும் வகையில், கயானா, டிரினிடாட்-
டுபாகோ மற்றும் கானா ஆகிய நாடுகளில் உள்ள மூன்று கிளைகளை வரும் 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று கிளைகளிலிருந்தும் சொற்ப அளவே வருவாய் கிடைப்பதாக பேங்க் ஆஃப் பரோடா தெரிவித்துள்ளது.
தேசிய வங்கி ஈடி-க்கள் எஸ்பிஐ-யில் எம்டி ஆகலாம்: தேசிய வங்கிகளில் செயல் இயக்குநராக (ஈடி) பணியாற்றி வருபவர்கள் இனி பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) நிர்வாக இயக்குநராகலாம் (எம்டி) என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com