பங்குச் சந்தையில் தொடர் மந்த நிலை

அமெரிக்க அரசியல் சூழ்நிலையின் நிச்சயமற்றத் தன்மையால் உலக நாடுகளின் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து மந்த நிலை நீடித்து வருகிறது. அதன் தாக்கம்
பங்குச் சந்தையில் தொடர் மந்த நிலை


அமெரிக்க அரசியல் சூழ்நிலையின் நிச்சயமற்றத் தன்மையால் உலக நாடுகளின் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து மந்த நிலை நீடித்து வருகிறது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் மூன்றாவது நாளாக வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை வர்த்தகத்திலும் எதிரொலித்தது.
அமெரிக்க அரசின் பல முக்கிய துறைகளின் முடக்கம் தொடர் கதையாகி வருவது இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பங்குச் சந்தைகளுக்கு சாதகமற்ற அம்சமாக மாறியுள்ளது. இதனால், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் லாப நோக்கு கருதி விற்பனை செய்தனர்.
இருப்பினும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு, கச்சா எண்ணெய் விலை சரிவு அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்களின் கவனம் இந்திய பங்குச் சந்தைகளின் பக்கம் திரும்ப உதவிகரமாக இருந்தது. இதனால், பங்குச் சந்தைகளில் ஏற்படவிருந்த கடும் சரிவு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.
ஹீரோ மோட்டோகார்ப் பங்கின் விலை 4.27 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ பங்கின் விலை 3.11 சதவீதமும் வீழ்ச்சி கண்டது. 
இதையடுத்து, என்டிபிசி (2.55%), ஹெச்சிஎல் டெக் (2.01%), ஹெச்டிஎஃப்சி வங்கி (1.33%), பஜாஜ் பைனான்ஸ் (1.28%), கோல் இந்தியா (1.19%) பங்குகளின் விலையும் கணிசமான அளவுக்கு சரிவை சந்தித்தன.
அதேசமயம், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, டிசிஎஸ், கோட்டக் வங்கி, இன்ஃபோசிஸ் பார்தி ஏர்டெல் மற்றும் எஸ்பிஐ பங்குகளின் விலை 1.03 சதவீதம் வரை உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 271 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 35,470 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 90.50 புள்ளிகள் சரிந்து 10,663 புள்ளிகளாக நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com