சென்செக்ஸ் 453 புள்ளிகள் அதிகரிப்பு

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டதையடுத்து சென்செக்ஸ் 453 புள்ளிகள் ஏற்றம் கண்டது.
சென்செக்ஸ் 453 புள்ளிகள் அதிகரிப்பு


மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டதையடுத்து சென்செக்ஸ் 453 புள்ளிகள் ஏற்றம் கண்டது.
அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 74 காசுகள் அதிகரித்து 69.88-ஐ எட்டியது; சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; அமெரிக்க மத்திய வங்கி தலைவர் ஜெரோம் பவல் முதலீட்டாளர்களுக்கு சாதகமான அறிவிப்புகளை வெளியிட்டது உள்ளிட்ட காரணங்களால் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது.
பஜாஜ் ஆட்டோ, கோட்டக் வங்கி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா, வேதாந்தா, இன்டஸ்இண்ட் வங்கி, ஏஷியன் பெயின்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்யுஎல், ஐடிசி, டாடா ஸ்டீல் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களின் பங்குகளின் விலை 5 சதவீதம் வரை அதிகரித்தன.
அதேசமயம், முதலீட்டாளர்களிடம் வரவேற்பை இழந்த, ஓஎன்ஜிசி, பவர்கிரிட், என்டிபிசி, இன்ஃபோசிஸ், யெஸ் வங்கி மற்றும் சன் பார்மா பங்குகளின் விலை 1.33 சதவீதம் வரை சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 453 புள்ளிகள் அதிகரித்து 36,170 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 129 புள்ளிகள் உயர்ந்து 10,858 புள்ளிகளில் நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com