பயணிகள் வாகன விற்பனை 6.88% உயர்வு

உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை நடப்பு நிதியாண்டின் முதல் ஆறுமாத காலத்தில் 6.88 சதவீதம் அதிகரித்துள்ளது.
பயணிகள் வாகன விற்பனை 6.88% உயர்வு

உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை நடப்பு நிதியாண்டின் முதல் ஆறுமாத காலத்தில் 6.88 சதவீதம் அதிகரித்துள்ளது.
 இதுகுறித்து இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத கால அளவில் பயணிகள் வாகனங்களுக்கான தேவை அதிகரித்ததையடுத்து அவற்றின் விற்பனை 17,44,305-ஆக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவு விற்பனையான 16,32,006 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 6.88 சதவீதம் அதிகமாகும். உள்நாட்டு சந்தையில் கார் விற்பனை 10,95,077-லிருந்து 6.8 சதவீதம் உயர்ந்து 11,69,497-ஆக இருந்தது. இருசக்கர வாகன விற்பனை 10.07 சதவீதம் உயர்ந்து 1,15,69,770-ஆகவும், வர்த்தக வாகன விற்பனை 37.82 சதவீதம் அதிகரித்து 4,87,316-ஆகவும் காணப்பட்டது என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com