அந்நியச் செலாவணி கையிருப்பு 119 கோடி டாலர் சரிவு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு சென்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 119 கோடி டாலர் சரிவைக் கண்டுள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 119 கோடி டாலர் சரிவு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு சென்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 119 கோடி டாலர் சரிவைக் கண்டுள்ளது.
 இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
 அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு மற்றும் தங்கத்தின் கையிருப்பு குறைந்ததையடுத்து, சென்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 119 கோடி டாலர் குறைந்து 40,010 கோடி டாலராக (சுமார் ரூ.27.60 லட்சம் கோடி) சரிவடைந்துள்ளது. இது இதற்கு முந்தைய வாரத்தில் 44.54 கோடி டாலர் அதிகரித்து 40,129 கோடி டாலராக காணப்பட்டது.
 அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 60.51 கோடி டாலர் குறைந்து 37,598 டாலராக இருந்தது. அதேபோன்று, தங்கத்தின் கையிருப்பும் 60.09 கோடி டாலர் குறைந்து 2,016 கோடி டாலராக காணப்பட்டது.
 அதேசமயம், சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர் மதிப்பு 55 லட்சம் டாலர் உயர்ந்து 147.7 கோடி டாலராகவும், அங்கு நம்நாடு வைத்துள்ள கையிருப்பு 91 லட்சம் டாலர் அதிகரித்து 2,476 கோடி டாலராகவும் இருந்தது என ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 கடந்த சில வாரங்களாக சரிவடைந்து வரும் ரூபாய் மதிப்பை தடுத்து நிறுத்துவதற்காக ரிசர்வ் வங்கி அதிக அளவிலான டாலர்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இதன் காரணமாகவே தற்போது அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து போயுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com