4ஜி பதிவிறக்க வேகத்தில் ஜியோ டாப்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4ஜி பதிவிறக்க வேகம் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் முதலிடத்தில் இருந்ததாக டிராய் தெரிவித்துள்ளது.
4ஜி பதிவிறக்க வேகத்தில் ஜியோ டாப்


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4ஜி பதிவிறக்க வேகம் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் முதலிடத்தில் இருந்ததாக டிராய் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தின் (டிராய்) அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 
சென்ற ஆகஸ்ட் மாதத்தில் ஜியோவின் 4ஜி பதிவிறக்க வேகமானது நொடிக்கு 10எம்பி (மொகாபைட்ஸ்) ஆக இருந்தது. பார்தி ஏர்டெல் நிறுவன வேகத்துடன் ஒப்பிடுகையில் இது இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகமானதாகும்.
ஐடியா நிறுவனத்தின் 4ஜி பதிவிறக்க வேகம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கிடையில் 6.2 எம்பிபிஎஸ்-ஆகவே இருந்தது. அதேசமயம், ஜூலையில் 6.4 எம்பிபிஎஸ்-ஆக காணப்பட்ட வோடஃபோன் நிறுவனத்தின் 4ஜி பதிவிறக்க வேகம் ஆகஸ்ட் மாதத்தில் 6.7 எம்பிபிஎஸ்-ஆக சிறிது முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களின் இணைப்பு நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் முழுமை பெற்று விட்டதாக ஐடியா-வோடஃபோன் ஏற்கெனவே தெரிவித்துவிட்டன.
பதிவிறக்க வேகத்தில் ஜியோ முதலிடத்தைப் பிடித்தாலும், பதிவேற்ற வேகத்தில் ஐடியா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்நிறுவனத்தின் 4ஜி பதிவேற்ற வேகம் 5.9 எம்பிபிஎஸ்-ஆக உள்ளது. 
ஐடியாவைத் தொடர்ந்து வோடஃபோன் நிறுவனத்தின் பதிவேற்ற வேகம் 5 எம்பிபிஎஸ்-லிருந்து 5.1 எம்பிபிஎஸ்-ஆக சற்று முன்னேற்றம் கண்டுள்ளது. அதேபோன்று சென்ற ஜூலையில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் பதிவேற்ற வேகம் முறையே 4.7 எம்பிபிஎஸ் மற்றும் 4.3 எம்பிபிஎஸ்-ஆக இருந்த நிலையில் ஆகஸ்டில் அவை 4.9 எம்பிபிஎஸ் மற்றும் 4.4 எம்பிபிஎஸ்-ஆக உயர்ந்துள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த பல மாதங்களாக ஜியோ மற்றும் ஐடியா நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் முதல் இடங்களைத் தக்க வைத்து கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com