நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்து வரும் ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் தலைமைச் செயல் அதிகாரியாக ஒய்.எஸ். சக்கரவர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அந்நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக ஒ.எஸ்.சக்கரவர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு, நிறுவனத்தின் செயல் இயக்குநராக பணியாற்றியவர்.
சக்கரவர்த்தி, நிதி சேவைகள் பிரிவில் ரீடெயில் பைனான்ஸ் வர்த்தகத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவர் என்று அந்த செய்திக்குறிப்பில் ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ்தெரிவித்துள்ளது.