பொதுத் துறையைச் சேர்ந்த பொறியியல் நிறுவனமான பிஎச்இஎல்-ன் தலைவராக நலின் சிங்கால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:
பிஎச்இஎல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நலின் சிங்கால் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக் காலம் ஐந்தாண்டுகள் ஆகும். நலின் சிங்கால் நியமனத்துக்கு உரிய அமைப்புகளின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என மும்பை பங்குச் சந்தையிடம் பிஎச்இஎல் தெரிவித்துள்ளது.