தொடர் சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை

இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் 9 நாள் தொடர் சரிவுக்குப் பிறகு திடீர் எழுச்சி கண்டது. நிதி, எரிசக்தி துறை பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு மேற்கொண்டதையடுத்
தொடர் சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை


இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் 9 நாள் தொடர் சரிவுக்குப் பிறகு திடீர் எழுச்சி கண்டது. நிதி, எரிசக்தி துறை பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு மேற்கொண்டதையடுத்து பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
மத்திய அரசு வெளியிட்ட பணவீக்க புள்ளிவிவரம் சாதகமான நிலையில் இருந்ததையடுத்து, ரிசர்வ் வங்கி அடுத்த மாதம் வெளியிடவுள்ள நிதிக் கொள்கை ஆய்வில் கடனுக்கான வட்டி விகிதத்தை மேலும் குறைக்கும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களிடையே ஏற்பட்டது. இதன் காரணமாக மிகுந்த உற்சாகத்துடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 227 புள்ளிகள் உயர்ந்து 37,318 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 73 புள்ளிகள் அதிகரித்து 11,222 புள்ளிகளாக நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com