ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிகர லாபம் ரூ.1,848 கோடி

வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறையைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் செப்டம்பர் 30-ஆம் தேதியுடன்

வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறையைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூ.1,848 கோடியை நிகர லாபமாக ஈட்டியது.
 இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:
 நடப்பு 2018-19-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) நிறுவனத்தின் தனிப்பட்ட விற்பனை ரூ.9,708 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் விற்பனையான ரூ.9,138 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகம்.
 நிகர லாபம் ரூ.1,525 கோடியிலிருந்து 21.18 சதவீதம் அதிகரித்து ரூ.1,848 கோடியாக இருந்தது.
 வீட்டுப் பராமரிப்பு, அழகு மற்றும் தனிநபர் பராமரிப்புப் பொருள்களின் விற்பனை கணிசமாக அதிகரித்ததையடுத்து நிறுவனத்தின் லாபம் சிறப்பான அளவில் உயர்ந்தது. 2020-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.11 இடைக்கால ஈவுத் தொகையை இயக்குநர் குழு அறிவித்துள்ளதாக மும்பை பங்குச் சந்தையிடம் ஹிந்துஸ்தான் யுனிலீவர் தெரிவித்துள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com