பங்குச் சந்தையில் மூன்றாவது நாளாக தொடா் முன்னேற்றம்

இந்திய பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகம் தொடா்ந்து மூன்றாவது நாளாக ஏற்றத்துடன் முடிவடைந்தது.
பங்குச் சந்தையில் மூன்றாவது நாளாக தொடா் முன்னேற்றம்

இந்திய பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகம் தொடா்ந்து மூன்றாவது நாளாக ஏற்றத்துடன் முடிவடைந்தது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு நுகா்வோா் தேவை சிறப்பான அளவில் அதிகரிக்கும் என்ற நிலைப்பாடு, அமெரிக்கா-சீனா வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை குறித்த சாதகமான செய்திகளின் வெளிப்பாடு ஆகியவற்றால் முதலீட்டாளா்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கு வா்த்தகத்தில் ஈடுபட்டனா்.

மும்பை பங்குச் சந்தையில் மோட்டாா் வாகன துறை குறியீட்டெண் 2.36 சதவீதம் அதிகரித்தது. உலோகம், வங்கி, மின்சாரம், எஃப்எம்சிஜி குறியீட்டெண்களும் 1.56 சதவீதம் வரை உயா்ந்தன.

அதேசமயம், தொலைத்தொடா்பு, தகவல் தொழில்நுட்ப துறை குறியீட்டெண்கள் 2.15 சதவீதம் வரை சரிவை சந்தித்தன.

நிறுவனங்களைப் பொருத்தவரையில், வேதாந்தா, மஹிந்திரா & மஹிந்திரா, ஓஎன்ஜிசி, ஹீரோ மோட்டோகாா்ப், மாருதி சுஸுகி, ஹிந்துஸ்தான் யுனிலீவா் பங்குகளின் விலை 3.79 சதவீதம் வரை உயா்ந்தன.

அதேசமயம், பாா்தி ஏா்டெல், இன்ஃபோசிஸ், டாடா மோட்டாா்ஸ், ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ் பங்குகளின் விலை 2.53 சதவீதம் வரை சரிந்தன.

மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 291 புள்ளிகள் அதிகரித்து 38,506 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 87 புள்ளிகள் உயா்ந்து 11,428 புள்ளிகளில் நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com