டாடா ஸ்டீல் உற்பத்தி 23 சதவீதம் அதிகரிப்பு

2018-19 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

2018-19 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி 23 சதவீதம் அதிகரித்துள்ளது.
 இதுகுறித்து அந்த நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
 2017-18 நிதியாண்டின் கடைசி காலாண்டில் நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி 62.6 லட்சம் டன்னாக காணப்பட்டது. அதனுடன் ஒப்பிடும்போது, 2018-19 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் உருக்கு உற்பத்தியானது 23 சதவீதம் அதிகரித்து 77 லட்சம் டன்னை எட்டியுள்ளது. இந்த காலாண்டில் உருக்கு உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சபட்ச அளவுக்கு உயர்ந்தது.
 நடப்பாண்டில் ஜனவரி-மார்ச் காலத்தில் இந்தியாவில் உருக்கு உற்பத்தி 30.7 லட்சம் டன்னிலிருந்து 44.70 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது என டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com