யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா லாபம் ரூ.224 கோடி

பொதுத் துறையைச் சேர்ந்த யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தனிப்பட்ட வகையில் முதல் காலாண்டில் ரூ.224.43 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா லாபம் ரூ.224 கோடி


பொதுத் துறையைச் சேர்ந்த யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தனிப்பட்ட வகையில் முதல் காலாண்டில் ரூ.224.43 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.129.54 கோடியுடன் ஒப்பிடுகையில் 73.3 சதவீதம் அதிகம். மொத்த வருவாய் ரூ.9,908.76 கோடியிலிருந்து குறைந்து ரூ.9,887.14 கோடியானது. 
வங்கியின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.140.50 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.230.12 கோடியாகவும், வருவாய் ரூ.10,042.29 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.10,053.68 கோடியாகவும் இருந்தது.
ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி வழங்கப்பட்ட மொத்த கடனில் நிகர வாராக் கடன் விகிதம் 8.70 சதவீதத்திலிருந்து குறைந்து 7.23 சதவீதமாகவும், மொத்த வாராக் கடன் விகிதம் 16 சதவீதத்திலிருந்து சரிந்து 15.18 சதவீதமாகவும் இருந்தது.
வாராக் கடன் இடர்பாட்டிற்காக ஒதுக்கப்படும் தொகை ரூ.1,803.17 கோடியிலிருந்து குறைந்து ரூ.1,431.10 கோடியாகி உள்ளது என யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com