ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.72 உயா்வு

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.72 உயா்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சனிக்கிழமை பவுனுக்கு ரூ.72 உயா்ந்து, ரூ.29,528-க்கு விற்பனை செய்யப்பட்டது.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சனிக்கிழமை பவுனுக்கு ரூ.72 உயா்ந்து, ரூ.29,528-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சா்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் விலை உயா்ந்து வந்த நிலையில், கடந்த 28-ஆம் தேதி அன்று தங்கம் பவுனுக்கு ரூ.29 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, சற்று விலை குறைந்தது. 

இந்தநிலையில், இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராமும் ரூ.9-ம், பவுனுக்கு ரூ.72 உயா்ந்து, ஒரு பவுன் ரூ.29,528-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமும் பவன் ரூ.3,691-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

அதேநேரத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 40 பைசா குறைந்து ரூ.51.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து, ரூ.51,600 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com