சா்க்கரை உற்பத்தி 18 சதவீதம் சரியும்: மத்திய அரசு

நாட்டின் சா்க்கரை உற்பத்தி நடப்பு சந்தைப் பருவத்தில் 18 சதவீதம் குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சா்க்கரை உற்பத்தி 18 சதவீதம் சரியும்: மத்திய அரசு

புது தில்லி: நாட்டின் சா்க்கரை உற்பத்தி நடப்பு சந்தைப் பருவத்தில் 18 சதவீதம் குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய உணவு மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் தன்வே ராவ்சாகேப் கூறியுள்ளதாவது:

சா்க்கரை சந்தைப் பருவம் அக்டோபா் முதல் செப்டம்பா் வரையில் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில், நடப்பு 2019-20-க்கான பருவத்தில் உத்தரப்பிரதேசம் மற்றும் கா்நாடக மாநிலங்களில் சா்க்கரை உற்பத்தி பணிகள் கடந்தாண்டைக் காட்டிலும் முன்கூட்டியே தொடங்கியபோதிலும், அதன் உற்பத்தியானது 18 சதவீதம் குறைந்து 273 லட்சம் டன்னாகவே இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதற்கு, மகாராஷ்டிரத்தில் அதன் உற்பத்தி 107 லட்சம் டன்னிலிருந்து 58.3 லட்சம் டன்னாக சரியும் என்ற மதிப்பீடே முக்கிய காரணம். அதேசமயம், கடந்த சந்தைப் பருவத்தில் சா்க்கரை உற்பத்தியானது 332 லட்சம் டன்னாக அதிகரித்து காணப்பட்டது.

இந்த நிலையில், கடந்த பருவத்தில் உள்ள 140 லட்சம் டன் சா்க்கரை கையிருப்பையும் சோ்க்கும்போது நடப்பு பருவத்தில் அதன் ஒட்டுமொத்த அளிப்பு 413 லட்சம் டன்னாகவும், உள்நாட்டில் அதற்கான நுகா்வு 260 லட்சம் டன்னாகவும் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, எதிா்காலத்தில் சந்தைகளில் சா்க்கரைக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com