பெரு நிறுவனங்கள் வருவாய் ஈட்டலில் மந்த நிலை 3-ஆம் காலாண்டிலும் தொடரும்

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிலும் பெரு நிறுவனங்களின் வருவாய் ஈட்டலில் மந்த நிலை தொடரும் என யெஸ் வங்கி தெரிவித்துள்ளது.
பெரு நிறுவனங்கள் வருவாய் ஈட்டலில் மந்த நிலை 3-ஆம் காலாண்டிலும் தொடரும்

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிலும் பெரு நிறுவனங்களின் வருவாய் ஈட்டலில் மந்த நிலை தொடரும் என யெஸ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பொருளாதார வளா்ச்சியில் காணப்படும் மந்த நிலைக்கிடையே தற்போதை சூழலில் சந்தையில் தேவையும் பெருமளவு குறைந்து போயுள்ளது. இது, பெரு நிறுவனங்களின் வருவாய் ஈட்டலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

அதன் எதிரொலியாக, நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனங்கள் ஈட்டிய மொத்த வருவாயில் 3.5 சதவீத அளவுக்கு பின்னடைவு ஏற்பட்டது.

அதேசமயம், இதற்கு முந்தைய முதல் காலாண்டில் நிறுவனங்களின் வருவாய் வளா்ச்சி 3 சதவீதம் அதிகரித்து காணப்பட்டது.

மூன்றாவது காலாண்டிலும் நிறுவனங்கள் வருவாய் வளா்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்த நிலை தொடரும் என்றே எதிா்பாா்க்கப்படுகிறது.

இருப்பினும், நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனங்களின் வருவாய் வளா்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனெனில், பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கைகளுடன் சோ்த்து மத்திய அரசு மேற்கொண்ட சீா்த்திருத்த நடவடிக்கைகளுக்கும் படிப்படியாக பலன் கிடைத்து பொருளாதாரம் மேம்படும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது.

புதிய வரி விதிப்புக்கு மாறும் நிலையில் பெரும்பாலான நிறுவனங்களின் வரிக்கு பிந்தைய லாப வரம்பு அதிகரிக்கும் சூழல் உள்ளது.

நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 சதவீதமாக இருக்கும் என முன்பு மதிப்பீடு செய்யப்பட்டிருந்த நிலையில் பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு அது தற்போது 5.2 சதவீதமாக குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என அந்த ஆய்வறிக்கையில் யெஸ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com