nano075842
nano075842

குவாட்ரிசைக்கிள் பிஎஸ்-6 விதிமுறை கட்டாயம்: பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது மத்திய அரசு

நான்கு சக்கர வாகனமான குவாட்ரிசைக்கிளுக்கு பிஎஸ்-6 விதிமுறையை கட்டாயமாக்குவது குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நான்கு சக்கர வாகனமான குவாட்ரிசைக்கிளுக்கு பிஎஸ்-6 விதிமுறையை கட்டாயமாக்குவது குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

வரும் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் குவாட்ரிசைக்கிளுக்கு பிஎஸ்-6 மாசுக்கட்டுப்பாட்டு தர விதிமுறைகளை கட்டாயமாக அமல்படுத்துவது குறித்து பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளையும், கருத்துகளையும் தெரிவிக்கலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குவாட்ரிசைக்கிளுக்கான பிஎஸ் 4 விதிமுறைகள் கடந்த 2018-ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து அமலில் உள்ளன. இந்த நிலையில், பிஎஸ்-6 விதிமுறைகளை அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்துவது தொடா்பாக பொதுமக்களின் கருத்தை அறியும் முயற்சியில் மத்திய அரசு தற்போது ஈடுபட்டுள்ளது.

ஐரோப்பிய தரநிா்ணய விதிமுறைகளை பின்பற்றி பிஎஸ்-6 மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com