யூகோ வங்கியின் இழப்பு ரூ.998 கோடி

பொதுத் துறையைச் சேர்ந்த யூகோ வங்கி மூன்றாவது காலாண்டில் ரூ.998.74 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது.
யூகோ வங்கியின் இழப்பு ரூ.998 கோடி


பொதுத் துறையைச் சேர்ந்த யூகோ வங்கி மூன்றாவது காலாண்டில் ரூ.998.74 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி செபியிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது: நடப்பு 2018-19-ஆம் நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் காலத்தில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.3,585.56 கோடியாக இருந்தது. 2017-18 நிதியாண்டில் இதே கால அளவில் காணப்பட்ட வருவாயான ரூ.3,721.93 கோடியுடன் ஒப்பிடுகையில் இது குறைவாகும். 
 வங்கிக்கு ஏற்பட்ட நிகர இழப்பு ரூ.1,016.43 கோடியிலிருந்து குறைந்து ரூ.998.74 கோடியாக இருந்தது. வாராக் கடன்களுக்கான ஒதுக்கீட்டு தொகை அதிகரித்ததையடுத்து வங்கிக்கு இழப்பு ஏற்பட்டது.
2017 டிசம்பர் நிலரவப்படி 20.64 சதவீதமாக காணப்பட்ட மொத்த வாராக் கடன் விகிதம் 2018 டிசம்பர் 31 நிலவரப்படி 27.39 சதவீதமாக அதிகரித்துள்ளது. நிகர வாராக் கடன் விகிதம் 10.90 சதவீதத்திலிருந்து அதிகரித்து 12.48 சதவீதத்தை எட்டியது.
டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடு ரூ.1,682.40 கோடியிலிருந்து வெகுவாக ஏற்றம் கண்டு ரூ.2,243.85 கோடியானது என யூகோ வங்கி செபியிடம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com