கோதுமை பயிரிடும் பரப்பு 298.47 லட்சம் ஹெக்டேர்

கோதுமை பயிரிடும் பரப்பளவு நடப்பு ரபி பருவத்தில் இதுவரையில் 298.47 லட்சம் ஹெக்டேராக உள்ளது என மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோதுமை பயிரிடும் பரப்பு 298.47 லட்சம் ஹெக்டேர்

கோதுமை பயிரிடும் பரப்பளவு நடப்பு ரபி பருவத்தில் இதுவரையில் 298.47 லட்சம் ஹெக்டேராக உள்ளது என மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து அந்த அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
 நடப்பு 2018-19 ரபி பருவத்தில் இதுவரையில் கோதுமை பயிரிடும் பரப்பளவு 298.47 லட்சம் ஹெக்டேரை எட்டியுள்ளது. இது, கடந்தாண்டில் 299.84 லட்சம் ஹெக்டேராக இருந்தது.முந்தைய ஆண்டைக் காட்டிலும் நெல், பருப்பு வகைகள், முக்கிய தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் சாகுபடி நடப்பாண்டு ரபி பருவத்தில் சற்று குறைந்தே உள்ளது.
 கோதுமை சாகுபடி பரப்பு அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 99.13 லட்சம் ஹெக்டேராக உள்ளது. இதையடுத்து, மத்திய பிரதேசத்தில் 59.11 லட்சம் ஹெக்டேரிலும், பஞ்சாபில் 35.02 லட்சம் ஹெக்டேரிலும், ஹரியாணாவில் 25.16 லட்சம் ஹெக்டேரிலும், பிகாரில் 22.56 லட்சம் ஹெக்டேரிலும் கோதுமை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
 பருப்பு வகைகளைப் பொருத்தவரை அதன் சாகுபடி பரப்பு பிப்ரவரி 14-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி 156.30 லட்சம் ஹெக்டேராக உள்ளது. கடந்தாண்டு சாகுபடி பரப்பான 166.11 லட்சம் ஹெக்டேருடன் ஒப்பிடுகையில் இது குறைவாகும்.
 முந்தைய ஆண்டில் 80.98 லட்சம் ஹெக்டேராக காணப்பட்ட எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்பு நடப்பு ரபி பருவத்தில் 80.40 லட்சம் ஹெக்டேராக இருந்தது.
 முக்கிய தானியங்கள் பயிரிடும் பரப்பு 57.02 லட்சம் ஹெக்டேரிலிருந்து 48.69 லட்சம் ஹெக்டேராக சுருங்கியுள்ளது. அதேபோன்று நெல் சாகுபடி பரப்பும் 39.64 லட்சம் ஹெக்டேரிலிருந்து சரிந்து 33.96 லட்சம் ஹெக்டேராகியுள்ளது.
 ரபி பருவத்தில் ஒட்டுமொத்த பயிர் சாகுபடி பரப்பு 643.60 லட்சம் ஹெக்டேரிலிருந்து 617.83 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது என மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com