பங்குச் சந்தைகளில் தொடர் விறுவிறுப்பு

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது வர்த்தக தினமான திங்கள்கிழமையன்றும் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
பங்குச் சந்தைகளில் தொடர் விறுவிறுப்பு


இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது வர்த்தக தினமான திங்கள்கிழமையன்றும் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
உள்நாட்டு சந்தையில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது மற்றும் வரவிருக்கும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு ஆகியவற்றால் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
சீன-அமெரிக்க நாடுகளிடையே வர்த்தக உறவுகள் மேம்படும் என்ற நம்பிக்கையால் சர்வதேச சந்தைகளிலும் வர்த்தகம் ஏற்றத்துடனேயே காணப்பட்டது. அதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
ரியல் எஸ்டேட் துறையின் செயல்பாடு சிறப்பாக இருந்ததையடுத்து அத்துறை குறியீட்டெண் 1.55 சதவீதம் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து, தொழில்நுட்பத் துறை குறியீட்டெண் 1.16 சதவீதமும், தகவல் தொழில்நுட்பம் 1.11 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள் 1.06 சதவீதமும், மின்சார துறை குறியீட்டெண் 1.03 சதவீதமும் அதிகரித்தன. அதேசமயம், மருந்து, உலோகம், மோட்டார் வாகன துறை குறியீட்டெண்கள் சரிவை சந்தித்தன.
ஆக்ஸிஸ் வங்கி பங்கின் விலை 2.84 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 2.64 சதவீதமும் அதிகரித்தன. அதேசமயம், பஜாஜ் ஆட்டோ, யெஸ் வங்கி, சன் பார்மா, எஸ்பிஐ பங்குகளின் விலை 2.82 சதவீதம் வரை குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 155 புள்ளிகள் அதிகரித்து 35,850 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 44 புள்ளிகள் உயர்ந்து 10,771 புள்ளிகளில் நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com