பங்குச் சந்தையில் திடீர் மந்த நிலை

தொடர்ந்து 4 நாள்களாக ஏறுமுகத்துடன் இருந்து வந்த பங்குச் சந்தை வியாழக்கிழமை வர்த்தகத்தின் போது மந்த நிலை கண்டது.
பங்குச் சந்தையில் திடீர் மந்த நிலை


தொடர்ந்து 4 நாள்களாக ஏறுமுகத்துடன் இருந்து வந்த பங்குச் சந்தை வியாழக்கிழமை வர்த்தகத்தின் போது மந்த நிலை கண்டது.
நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளதையடுத்து முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர். 
மேலும், சர்வதேச சந்தையில் காணப்பட்ட சுணக்க நிலை, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு பலவீனமடைந்தது ஆகிய நிகழ்வுகளும் சந்தை வர்த்தகத்துக்கு சாதகமாக அமையவில்லை.
வங்கி துறை பங்குகள் லாப நோக்கு கருதி விற்பனை செய்யப்பட்டதையடுத்து, இன்டஸ்இண்ட் வங்கி, கோட்டக் வங்கி, பெடரல் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் எஸ்பிஐ பங்குகளின் விலை 2.36 சதவீதம் வரை சரிவடைந்தது.
இதைத் தவிர, ஓஎன்ஜிசி, மாருதி சுஸுகி, சன் பார்மா, ஹெச்டிஎஃப்சி, ஹீரோ மோட்டோகார்ப், ஐடிசி, ஹெச்சிஎல் டெக் பங்குகளின் விலையும் 1.31 சதவீதம் வரை குறைந்தன. காலாண்டு முடிவை எதிர்பார்த்து டிசிஎஸ் பங்குகளின் விலை ஏற்ற இறக்கமின்றி காணப்பட்டது.
இருப்பினும், டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, இன்ஃபோசிஸ், யெஸ் வங்கி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா, எல் அண்டு டி, பார்தி ஏர்டெல், ஹெச்யுஎல் பங்குகளின் விலை 1.31 சதவீதம் வரை உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 106 புள்ளிகள் சரிந்து 36,106 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 33 புள்ளிகள் குறைந்து 10,821 புள்ளிகளில் நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com