டாடா மோட்டார்ஸ் சர்வதேச விற்பனை 13% சரிவு

டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் சர்வதேச விற்பனை டிசம்பரில் 13.9 சதவீதம் சரிந்துள்ளது. 
டாடா மோட்டார்ஸ் சர்வதேச விற்பனை 13% சரிவு


டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் சர்வதேச விற்பனை டிசம்பரில் 13.9 சதவீதம் சரிந்துள்ளது. 
இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஜாகுவார் லேண்ட் ரோவர் (ஜேஎல்ஆர்) உள்ளிட்ட டாடா குழுமத்தின் சர்வதேச வாகன விற்பனை 2018 டிசம்பரில் 1,00,551-ஆக இருந்தது. 2017 டிசம்பரில் விற்பனையான 1,16,677 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 13.9 சதவீத சரிவாகும்.
டாடா மோட்டார்ஸின் பயணிகள் வாகன விற்பனை 14 சதவீதம் குறைந்து 59,898-ஆக இருந்தது.
ஜேஎல்ஆர் விற்பனை 45,474-ஆக காணப்பட்டது. அதில் ஜாகுவார் விற்பனை 59,898-ஆகவும், லேண்ட் ரோவர் விற்பனை 31,386-ஆகவும் இருந்தன. சர்வதேச அளவில் டாடா மோட்டாஸின் வர்த்தக வாகனங்கள் மற்றும் டாடா டேவூ விற்பனை 14 சதவீதம் குறைந்து 40,653-ஆக காணப்பட்டது என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com