ஐடிஎஃப்சி வங்கி "ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் ' என பெயர் மாற்றம்

தனியார் துறையைச் சேர்ந்த ஐடிஎஃப்சி வங்கியின் பெயர் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி என மாற்றப்பட்டுள்ளது.
ஐடிஎஃப்சி வங்கி "ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் ' என பெயர் மாற்றம்

தனியார் துறையைச் சேர்ந்த ஐடிஎஃப்சி வங்கியின் பெயர் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி என மாற்றப்பட்டுள்ளது.
 இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தையிடம் சனிக்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
 ஐடிஎஃப்சி வங்கி "ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்றத்துக்கு கம்பெனி பதிவாளர் சென்னை அலுவலகம் அனுமதி சான்றிதழ் வழங்கியுள்ளது.
 வங்கியின் பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பு சனிக்கிழமை (ஜன.12) முதல் அமலுக்கு வந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ஐடிஎஃப்சி வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனமான கேப்பிடல் ஃபர்ஸ்ட் நிறுவனம் ஆகியவை தங்களது இணைப்பு நடவடிக்கைகள் டிசம்பர் 18-இல் முழுமை பெற்றதாக அறிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com