சுடச்சுட

  
  pti

  பெங்களூருவில் யமஹா எஃப்இசட் மாடல் பைக்கை திங்கள்கிழமை அறிமுகப்படுத்தும் யமஹா மோட்டார் இந்தியா குழும நிறுவனங்களின் தலைவர் மோட்டோஃபியுமி ஷிதாரா


  யமஹா நிறுவனம், எஃப்இசட் பிரிவில் புதிய மாடல்களில் பிரிமீயம் ரக பைக்குகளை திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.
  இதுகுறித்து யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
  முற்றிலும் நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட எஃப்இசட்-எஃப்ஐ மற்றும் எஃப்இசட்-எஸ் எஃப்ஐ பைக்குகளை இந்திய சந்தையில் யமஹா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்குகள் ஏபிஎஸ் எனப்படும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியுள்ளது.
  மேலும், இந்த மாடல்களில் 149சிசி 4-ஸ்ட்ரோக், சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
  எஃப்இசட்-எஃப்ஐ மாடலின் விலை ரூ.95,000-ஆகவும், எஃப்இசட்-எஸ் எஃப்ஐ மாடலின் விலை ரூ.97,000-ஆகவும் (தில்லி விற்பனையக விலை) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  அதேபோன்று, எஃப்இசட் 25 மாடலில் ஏபிஎஸ் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
  அதன் விலை ரூ.1.33 லட்சமாகும் என யமஹா நிறுவனம் தெரிவித்துள்ளது.
  இந்தப் புதிய அறிமுகத்தின் மூலம், இந்திய சந்தையில் டீலக்ஸ் வகை பைக்குகள் பிரிவில் நிறுவனத்தின் பங்களிப்பு மேலும் வலுப்பெறும் என்று யமஹா மோட்டார் இந்தியா குழும நிறுவனங்களின் தலைவர் மோட்டோஃபியுமி ஷிதாரா தெரிவித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai