பங்குச் சந்தையில் தொடர் முன்னேற்றம்

இந்தியப் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வர்த்தகம் செவ்வாய்க்கிழமையன்றும் ஏற்றம் கண்டது.
பங்குச் சந்தையில் தொடர் முன்னேற்றம்


இந்தியப் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வர்த்தகம் செவ்வாய்க்கிழமையன்றும் ஏற்றம் கண்டது.
தயாரிப்பு துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலை, ஜிஎஸ்டி வரி வருவாயில் ஏற்பட்ட சரிவு, பருவமழை தாமதம், சர்வதேச பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட நிகழ்வுகளால் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் தொடக்கத்தில் வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடனேயே காணப்பட்டது. 
இந்த நிலையில், மத்திய அரசு வரும் வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சிக்கான சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்ற நிலைப்பாட்டால் இரண்டாம் கட்டத்தில் வர்த்தகம் சூடுபிடித்தது.
குறிப்பாக, எண்ணெய்-எரிவாயு, எரிசக்தி, தகவல் தொழில்நுட்ப பங்குகளில் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வாங்கியதையடுத்து அத்துறைகளின் குறியீட்டெண் 1.11 சதவீதம் வரை உயர்ந்தது. அதேசமயம், ரியல் எஸ்டேட், மருந்து, வங்கி துறை குறியீட்டெண்கள் 1.82 சதவீதம் வரை சரிவைக் கண்டன.
ஓஎன்ஜிசி, பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி, இன்ஃபோசிஸ், மாருதி சுஸுகி, ஹெச்சிஎல் டெக், மஹிந்திரா & மஹிந்திரா, ஹெச்யுஎல், டெக்மஹிந்திரா மற்றும் எஸ்பிஐ பங்குகளின் விலை 2.89 சதவீதம் வரை அதிகரித்தன.
யெஸ் வங்கி பங்கின் விலை 7.60 சதவீதம் வீழ்ச்சியைக் கண்டது. இதைத் தொடர்ந்து, டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, இன்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் ஆட்டோ, ஆக்ஸிஸ் வங்கி, கோட்டக் வங்கி மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன பங்குகளின் விலை 2.47 சதவீதம் வரை குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 129 புள்ளிகள் உயர்ந்து 39,816 புள்ளிகளாக நிலைத்தது. 
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 44 புள்ளிகள் அதிகரித்து 11,910 புள்ளிகளாக நிலைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com