பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் தொடர்ந்து மூன்றாவது வர்த்தக தினமாக கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி


இந்திய பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் தொடர்ந்து மூன்றாவது வர்த்தக தினமாக கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
சர்வதேச சந்தையில் காணப்பட்ட மந்த நிலை, இந்திய நிறுவனங்களின் முதல் காலாண்டு முடிவுகள் சந்தை எதிர்பார்ப்பிற்கு ஏற்றபடி இல்லாதது, பொருளாதார வளர்ச்சியில் நீடித்து வரும் சுணக்க நிலை ஆகியவை பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் உற்சாகத்தை குறைத்தது. இவைதவிர, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு, அந்நிய நிதி நிறுவனங்கள் கணிசமான அளவில் பங்குகளை விற்று வெளியேறியது உள்ளிட்டவை பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சிக்கு  முக்கிய காரணங்களாயின. 
லாப நோக்கு விற்பனையால், எஃப்எம்சிஜி, வங்கி, ரியல் எஸ்டேட் துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண் 2.28 சதவீதம் வரை சரிந்தது.
அதேசமயம், எரிசக்தி, உலோகம், எண்ணெய்-எரிவாயு , தொலைத்தொடர்பு துறை குறியீட்டெண்கள் 1.92 சதவீதம் வரை உயர்ந்தன.
நிறுவனங்களைப் பொருத்தவரையில் சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஹெச்டிஎஃப்சி நிறுவனம் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி பங்குகளின் விலை முறையே 5.09 சதவீதம் மற்றும் 3.32 சதவீதம் இழப்பைக் கண்டன. இதைத்தவிர, கோட்டக் வங்கி 3.08 சதவீதமும், எஸ்பிஐ மற்றும் பஜாஜ் பைனான்ஸ் பங்குகளின் விலை 2.21 சதவீதம் வரையிலும் குறைந்தன. 
யெஸ் வங்கி பங்குகள் அதிகபட்சமாக 9.49 சதவீத விலை உயர்வைக் கண்டன. இதைத் தொடர்ந்து,  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏஷியன் பெயின்ட்ஸ், மாருதி சுஸுகி, சன்பார்மா பங்குகளின் விலை 3.85 சதவீதம் வரையிலான உயர்வுடன் முடிவடைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 305 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 38,031 புள்ளிகளாக நிலைத்தது. இரண்டரை மாதங்களுக்கு பிறகு சென்செக்ஸ் இந்த அளவுக்கு சரிவது இதுவே முதல் முறை. 
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 73 புள்ளிகள் குறைந்து 11,346 புள்ளிகளாக நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com