சென்செக்ஸ் 289 புள்ளிகள் வீழ்ச்சி

சர்வதேச அளவில் காணப்பட்ட நிச்சயமற்ற சந்தை நிலவரங்களால்  மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவுடன் காணப்பட்டது.
சென்செக்ஸ் 289 புள்ளிகள் வீழ்ச்சி

சர்வதேச அளவில் காணப்பட்ட நிச்சயமற்ற சந்தை நிலவரங்களால்  மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவுடன் காணப்பட்டது.
சர்வதேச சந்தையில் காணப்பட்டு வரும் ஸ்திரமற்ற தன்மை பங்கு வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே மந்த நிலையை ஏற்படுத்தியது. 
சீனாவின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி கடந்த 17 ஆண்டுகள் காணாத அளவில் சரிவைக் கண்டது,   எண்ணெய் கப்பல்கள் தாக்குதல் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானிடையே தொடர்ந்து கடுமையான வார்த்தை மோதல்கள் வெடித்து வருவது முதலீட்டாளர்களிடையே அச்சத்தை அதிகரித்தது. 
அதுமட்டுமின்றி, அமெரிக்க-சீன வர்த்தகப் போர், அமெரிக்க மத்திய வங்கி நிதிக் கொள்கை வெளியீடு குறித்த எதிர்பார்ப்பு, பருவநிலை முன்னேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டும் சர்வதேச முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர். அதன் தாக்கம் பங்குச் சந்தைகளில் தொடர்ச்சியாக உணரப்பட்டும் வருகிறது.
முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததையடுத்து, பொறியியல் பொருள்கள் தவிர்த்து மும்பை பங்குச் சந்தையில் அனைத்து துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண்களும் சரிவைக் கண்டன.
இன்டஸ்இண்ட் வங்கி, பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, கோட்டக் வங்கி, பஜாஜ் ஆட்டோ, யெஸ் வங்கி, ஹெச்சிஎல் டெக், ஹெச்யுஎல் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் பங்குகளின் விலை 4.36 சதவீதம் வரை குறைந்தன.
அதேசமயம், எல் & டி, வேதாந்தா, சன் பார்மா, பவர் கிரிட் மற்றும் டிசிஎஸ் பங்குகள் 0.80 சதவீதம் வரை விலை உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசி தினமான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 289 புள்ளிகள் சரிவடைந்து 39,452 புள்ளிகளாக நிலைத்தது. 
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 90 புள்ளிகள் குறைந்து 11,823 புள்ளிகளாக நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com