சுடச்சுட

  

  ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திலிருந்து வெளியேறியது பிராமல் எண்டர்பிரைசஸ்

  By DIN  |   Published on : 18th June 2019 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sell


  ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனத்தில் வைத்திருந்த தனது பங்குகள் முழுவதையும் விற்று பிராமல் எண்டர்பிரைசஸ் வெளியேறியுள்ளது.
  இதுகுறித்து மும்பை பங்குச் சந்தையிடம் பிராமல் எண்டர்பிரைசஸ் திங்கள்கிழமை கூறியுள்ளதாவது:
  ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனத்தில் எங்களின் முழு அளவிலான நேரடி முதலீட்டை விலக்கி கொண்டுள்ளோம். அந்த வகையில், அளிக்கப்பட்ட பங்கு மூலதனமாக வைத்திருந்த 9.96 சதவீத பங்குகளை முழுவதுமாக விற்று அந்நிறுவனத்திலிருந்து வெளியேறியுள்ளோம் என்று மும்பை பங்குச் சந்தையிடம் பிராமல் எண்டர்பிரைசஸ் தெரிவித்துள்ளது.
  கடந்த 2013-ஆம் ஆண்டு மே மாதத்தில், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் 9.96 சதவீத பங்குகளை பிராமல் எண்டர்பிரைசஸ் ரூ.1,652 கோடிக்கு கையகப்படுத்தியது. 
  கடந்த ஆறு ஆண்டுகளாக, ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸின் பங்குதாரராக இருந்த பிராமல் எண்டர்பிரைசஸ் தற்போது அந்த பங்குகள் முழுவதையும் ரூ.2,305 கோடிக்கு பங்குச் சந்தையின் மூலமாக திங்கள்கிழமை  விற்பனை செய்துள்ளது. இந்த விற்பனையின் மூலம், பிராமல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு வெறும் ஆறே ஆண்டுகளில் ரூ.653 கோடி (40%) லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
  பிராமல் எண்டர்பிரைசஸ் வெளியேறியதையடுத்து, ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் பங்கின் விலை 8 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்தது. 
  மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் பங்கின் விலை 6.52 சதவீதம் குறைந்து ரூ.1,011-ஆனது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் இந்நிறுவனப் பங்கின் விலை 7.82 சதவீதம் சரிந்து ரூ.1,000-ஆக இருந்தது.
  இதேபோன்று, மும்பை பங்குச் சந்தையில் பிராமல் எண்டர்பிரைசஸ் பங்கின் விலை 1.85 சதவீதம் குறைந்து ரூ.2,030.10-ஆக காணப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai