பங்குச் சந்தையில் எழுச்சி: சென்செக்ஸ் 488 புள்ளிகள் அதிகரிப்பு

இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற  வர்த்தகம் எழுச்சியுடன் காணப்பட்டது. இதையடுத்து, சென்செக்ஸ் 488 புள்ளிகள் வரை உயர்ந்து முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 
பங்குச் சந்தையில் எழுச்சி: சென்செக்ஸ் 488 புள்ளிகள் அதிகரிப்பு


இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற  வர்த்தகம் எழுச்சியுடன் காணப்பட்டது. இதையடுத்து, சென்செக்ஸ் 488 புள்ளிகள் வரை உயர்ந்து முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 
அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டத்தில் கடனுக்கான வட்டி விகிதத்தை தற்போதைய நிலையிலேயே தக்க வைக்க முடிவெடுக்கப்பட்டது. இருப்பினும், எதிர்கால சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில்  வட்டி குறைப்புக்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக  அவ்வங்கி தெரிவித்ததையடுத்து சர்வதேச சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்படைந்தது. அதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் உணரப்பட்டது. 
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு, வரவுள்ள பட்ஜெட்டில் தொழில்துறை வளர்ச்சிக்கு சாதகமான அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் இணைந்து 100 நாள் செயல்திட்டத்தை வகுக்க முனைந்துள்ளது ஆகியவை பங்குச் சந்தைகளின் ஏற்றத்துக்கு கூடுதல் வலு சேர்த்தது.
மும்பை பங்குச் சந்தையில், மோட்டார் வாகனம், பொறியியல் சாதனங்கள், மருந்து தயாரிப்பு, தொலைத்தொடர்பு, நுகர்வோர் சாதனங்கள், ரியல் எஸ்டேட், உலோகம் உள்ளிட்ட அனைத்து துறையைச் சேர்ந்த குறியீட்டெண்களும் 2.46 சதவீதம் வரை ஏற்றம் கண்டன. யெஸ் வங்கி பங்கின் விலை 10.94 சதவீதம் அதிகரித்தது.
கடந்த 13 வர்த்தக தினங்களாக 90 சதவீதம் வரை சரிந்த ஜெட் ஏர்வேஸ் பங்குகளின் விலை வியாழக்கிழமை வர்த்தகத்தில் 93 சதவீத ஏற்றத்தைக் கண்டது. அதேசமயம், முதலீட்டாளர்களிடம் வரவேற்பு கிடைக்காததால், ஹெச்யுஎல், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐடிசி மற்றும் என்டிபிசி பங்குகளின் விலை 0.26 சதவீதம் வரை குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 488 புள்ளிகள் அதிகரித்து 39,601 புள்ளிகளாக நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 140 புள்ளிகள் உயர்ந்து 11,831 புள்ளிகளாக நிலைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com