அமெரிக்காவில் துணை நிறுவனம்: சுவென் லைஃப்

அமெரிக்காவில் துணை நிறுவனத்தை அமைக்கவுள்ளதாக மருந்து தயாரிப்பு துறையைச் சேர்ந்த சுவென் லைஃப் சயின்சஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் துணை நிறுவனம்: சுவென் லைஃப்

அமெரிக்காவில் துணை நிறுவனத்தை அமைக்கவுள்ளதாக மருந்து தயாரிப்பு துறையைச் சேர்ந்த சுவென் லைஃப் சயின்சஸ் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து அந்த நிறுவனம் செபி-யிடம் தெரிவித்துள்ளதாவது:
 அமெரிக்காவில் சுவென் லைஃப் சயின்ஸýக்கு முற்றிலும் சொந்தமான துணை நிறுவனத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை, சனிக்கிழமை நடைபெற்ற நிறுவனத்தின் இயக்குநர் குழு வழங்கியுள்ளது.
 மேலும், இந்த துணை நிறுவனத்தின் மூலம் மருந்துத் தயாரிப்புத் துறையில் புதிய வர்த்தக சூழலை உருவாக்குவதற்கும், கையகப்படுத்துதல் நடவடிக்கைகளுக்காகவும் ரூ.525 கோடியை முதலீடு செய்யும் திட்டத்துக்கும் இயக்குநர் குழு அனுமதி வழங்கியுள்ளது என சுவென் லைஃப் சயின்ஸ் செபி-யிடம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com